பாஜக போட்டியிடுகிறதா? - இன்று மாலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா? என்பது குறித்து இன்று (ஜன., 12) மாலை அறிவிப்பு வெளியாகவுள்ளது. பாஜக உட்கட்சி தேர்தல் தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தே.ஜ. கூட்டணியில் பாஜக போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் தமாகா கட்சியும் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி