சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 50 வயது பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சதீஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், உள்நோயாளியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு பற்றி வசனம் பேசிய முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார் என கேள்வியெழுப்பியுள்ளார்.