குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் 3 மாவட்டங்களில் நாளை (ஜன.14) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.