மதுரை: நாளை (ஜன. 14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து வாடிவாசல் தடுப்புகளை அமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் இல்லத்தின் முன் கட்டப்பட்ட தடுப்புகளை அவர் மனைவி அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.