மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஒப்படைக்க கோரி தீபா மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், "சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக சொத்துக்கள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.