கர்நாடகா: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அருகே உள்ள பழைய பென்சன் மொகல்லா பகுதியைச் சேர்ந்தவர் கர்ணா. இவரது வீட்டில் கட்டிவைக்கப்பட்ட மூன்று பசு மாடுகளின் மடியை அடையாளம் தெரியாத நபர் இரவு நேரத்தில் வெட்டிவிட்டுச் சென்றுள்ளார். நேற்று காலை அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கர்ணா, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சையத் நஸ்ரு என்பவர் போதையில் இதனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.