மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை (ஜன. 14) நடைபெறவுள்ளது. இந்த முறை 2,035 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக ரூ. 8.50 லட்சம் மதிப்புடைய நிசான் நிறுவனத்தின் 'மேக்னட்' கார் பரிசாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.