கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் அருகே அமைந்துள்ள பாஜக அலுவலகம் அருகே ஆதிதமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர், மாட்டு இறைச்சியை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில், கோவையில் பீப் பிரியாணி கடை நடத்தக் கூடாது என பாஜக பிரமுகர்கள் மிரட்டுவதாக வீடியோ வெளியானது. அந்த பிரமுகரை கைது செய்யக்கோரி, இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.