"ஆளுநர் எனும் பொறுப்பிற்கு ஆர்.என். ரவி அவமானச் சின்னம்"

54பார்த்தது
"ஆளுநர் எனும் பொறுப்பிற்கு ஆர்.என். ரவி அவமானச் சின்னம்"
ஆளுநர் எனும் பொறுப்பிற்கு ஆர்.என்.ரவி அவமானச் சின்னம் என திமுக எம்பி வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கையாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவும் தமிழகமும் எங்கள் இரண்டு கண்களைப் போன்றவை" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி