திமுக உடனான போருக்கு பாஜக தயாராக இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல. முதுகில் குத்துபவர்கள். என் போட்டியை எதிர்கொள்ள தகுதி உனக்கு இல்லை என பாஜக கூறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.