புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு இந்த தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் HMPV தொற்று கண்டறியப்பட்டதாக மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது,
நன்றி: NewsTamilTV24x7