டெங்கு வைரஸ் மிக மிக ஆபத்தானது. ஏன் தெரியுமா?

இரத்த தட்டணுக்கள்(பிளேட்லெட்டுகள்) இரத்தம் உறைவதற்கு மிக முக்கிய காரணியாகும். டெங்கு வைரஸ் இரத்த தட்டணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது உடம்பில் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவில் குறைகிறது. மேலும் நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்க விட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். எனவே டெங்கு பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது மிக அவசியம்.

தொடர்புடைய செய்தி