செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஜூலைக்கு ஒத்திவைப்பு

22327பார்த்தது
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஜூலைக்கு ஒத்திவைப்பு
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நேற்று (மே 15) விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.

இந்தநிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேறு வழக்கின் விசாரணை இருப்பதாக கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறிய நிலையில், அதனை ஏற்று வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி