3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

81பார்த்தது
3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி