பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

85பார்த்தது
பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
சுரங்கப் பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி