பாஜக மக்களவை உறுப்பினர் தேர்தலில் இருந்து விலகல்

குஜராத் மாநிலம் வதோதரா பாஜக மக்களவை உறுப்பினர் ரஞ்சன்பென் பட் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் இருந்து விலகியதாக அவர் சனிக்கிழமை அறிவித்தார். சமீபத்தில் வெளியான பாஜகவின் இரண்டாவது பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் இரண்டு முறை வதோதராவில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக வாய்ப்பு கிடைத்ததையடுத்து, அவர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி