நடிகர் உதட்டில் முத்தம் கொடுக்க முயன்ற நபர் (வீடியோ)

65பார்த்தது
கன்னட நடிகர் துனியா விஜய் கடந்த ஜனவரி மாதத்தில் இவரது பிறந்தநாளுக்காக ரசிகர்களை அவர் சந்தித்தார். அப்போது ரசிகர்கள் அனைவரும் வரிசையாக அவருக்கு சோறு ஊட்டி மகிழ்ந்தனர். அப்போது ஆர்வக் கோளாறில் ரசிகர் ஒருவர் துனியா விஜய்க்கு சோறு ஊட்டியது மட்டுமல்லாது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பழைய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. காரணம் நம்ம விஜய் ரசிகர்கள். தற்போது கேரளா சென்றிருக்கும் நடிகர் விஜய் கெட்டப்பும் வீடியோவில் இருக்கும் துனியா விஜய் கெட்டப்பும் ஒரே போல் உள்ளதால் குழப்பமடைந்த விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. அது விஜய் இல்லை துனியா விஜய் என தெரிந்த பிறகு இப்படி பொய்யாக வீடியோவை பரப்பாதீங்க என கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி