BREAKING: அதிமுக நெல்லை வேட்பாளர் மாற்றம்

119513பார்த்தது
BREAKING: அதிமுக நெல்லை வேட்பாளர் மாற்றம்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லையில் போட்டியிடும் சிம்லா முத்துசோழன் என்பவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஜான்சிராணி என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். ஜான்சிராணி திசையன்விளை பேரூராட்சி தலைவராக உள்ளார். கட்சியில் இணைந்த 15 நாட்களில் சீட் கொடுத்ததற்கும், ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கியவர் என்பதாலும் அவருக்கு சீட் கொடுத்ததில் அதிமுக மத்தியில் அதிருப்தி எழுந்திருந்தது.

தொடர்புடைய செய்தி