பாஜகவில் சேர முயன்ற தஞ்சை தேமுதிக செயலாளர் அதிரடி நீக்கம்

585பார்த்தது
பாஜகவில் சேர முயன்ற தஞ்சை தேமுதிக செயலாளர் அதிரடி நீக்கம்
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட உள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதன் தேமுதிகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ராமநாதன்தனது ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைய திட்டமிட்டது தெரியவந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி