சிரஞ்சீவியை சந்தித்த அஜித் - புகைப்படம் வைரல்

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "குட் பேட் அக்லி" படத்தில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் பொங்கல் 2025இல் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அஜித்குமார் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார். குட், பேட், அக்லி படத்தின் படப்பிடிப்பும், சிரஞ்சீவி நடிக்கும் 'விஷ்வாம்பரா' படப்பிடிப்பும் ஒரே இடத்தில் ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் சிரஞ்சீவி பட படப்பிடிப்பு தளத்திற்கு அஜித் சென்று அவரை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி