பணத்தை திருப்பி கேட்ட பாட்டியை கொலை செய்த பேரன்

80பார்த்தது
பணத்தை திருப்பி கேட்ட பாட்டியை கொலை செய்த பேரன்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் வள்ளியம்மை (84). தனது கணவனை இழந்த மகள் வெள்ளைத்தாய் மற்றும் 15 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வள்ளியம்மாள் வைத்திருந்த ரூ.1,500 பணத்தை பேரன் எடுத்துச் சென்றான். அதன் பின் இரவு வீட்டிற்கு வந்த பேரனிடம் எடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வள்ளியம்மாளை கீழே தள்ளிய பேரன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து சிறுவன் தப்பியோடினான்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி