பாஜக வேட்பாளரின் கார் மோதி 2 சிறுவர்கள் பலி

71பார்த்தது
பாஜக வேட்பாளரின் கார் மோதி 2 சிறுவர்கள் பலி
உத்தரப் பிரதேத்தின் கைசர்கஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாலியல் வழக்கில் சிக்கிய பிர்ஜ் பூஷன் சிங்கின் மகனுமான கரண் பூஷன் சிங்கின் இன்று (மே 29) காரில் சென்றுகொண்டிருந்தார். அவரது பாதுகாப்பிற்காக சென்ற மற்றொரு கார் ஒன்று சாலையில் இருந்த சிறுவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி