பரமக்குடி அருகே மதுரை - ராமநாதபுரம் சாலையில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த முகமது இப்ராஹிம் (46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கார் மற்றும் பேருந்தில் பயணித்த சுமார் 10க்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.