-PM

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரை த்ரிஷா திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து த்ரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடைபெறவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக "லியோ" படத்திலும் த்ரிஷா நடித்துள்ளார்.