பழனியை சேர்ந்த தம்பதி இளங்குமரன் - ரேணுகாதேவி. இவர்களின் மகன் வினீத் கோவையில் தங்கி பணியாற்றும் நிலையில் மகள் தேன்மொழி (17), 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (அக். 23) காலை முதல் இவர்களின் வீடு திறக்காமல் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் வந்து பார்த்த போது மூவரும் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். கடன் தொல்லையால் மனைவி, மகளை கொன்றுவிட்டு இளங்குமரன் தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.