நரேந்திரமோடி-Narendra Modi

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம். ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்?

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம். ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்?

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று (23. 06. 23) எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, சரத்பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்து சென்னை திரும்பிய மு. க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக நினைக்க வேண்டாம். ஒடுக்கப்பட்ட மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது இருக்கக் கூடாது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை” என, பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.