முகவரியில் இல்லையென்றால் பட்டியலில் பெயர் இருக்காது

57பார்த்தது
முகவரியில் இல்லையென்றால் பட்டியலில் பெயர் இருக்காது
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து ஆக்டொபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும், முகவரியில் இல்லாவிட்டால் அவர்களது பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக Case by Case விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 1996ல் தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும்; புதிய அட்டைதான் தேவையென்று இல்லை என தெரிவித்துளளார்.

தொடர்புடைய செய்தி