'பசி' பட இயக்குனர் துரை காலமானார்

50பார்த்தது
'பசி' பட இயக்குனர் துரை காலமானார்
பிரபல மூத்த திரைப்பட இயக்குனரான துரை 70, 80 களில் தமிழ் சினிமாவில் பல கிளாசிக் படங்களை இயக்கியவர் ஆவார். இந்நிலையில் 84 வயதான இவர், உடல்நலக் குறைவால் இன்று (ஏப்ரல் 22) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இயக்குனராக மட்டுமின்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர் கலைமாமணி பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் இயக்கிய 'பசி' திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி