வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு வரவேற்பு

175பார்த்தது
வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு வரவேற்பு
அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் வரவேற்றனர். அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் மோடி இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி