சில தெய்வங்களுக்கு சில மலர்களால் அர்ச்சனை செய்யக்கூடாது. திருமாலுக்கு நந்தியாவட்டமும், அம்பிகைக்கு நெல்லியும், விநாயகருக்கு துளசியும், சிவனுக்கு தாழம்பூவும், துர்கைக்கு அருகம்புல்லும், சூரியனுக்கு வில்வமும் பயன்படாத மலர்கள் ஆகும். மேலும் பறித்த பின் மலர்ந்த மலர்கள், எருக்கு, ஆமணக்கு இலையில் கட்டி வைத்த மலர்கள், உதிர்ந்த மலர்கள், பூச்சி அரித்த மலர்கள், பறவை எச்சம் பட்ட மலர்கள், கீழே விழுந்த மலர்களை பயன்படுத்தக் கூடாது.