பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.டி.சபாபதி தட்சிணாமூர்த்தி. விஜயகாந்த் நடித்த 'பரதன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு பிரசாந்த் நடித்த 'எங்க தம்பி', உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த 'பந்தெம்', கன்னடத்தில் 'ஜாலி பாய்' ஆகிய படங்களை இயக்கினார். 61 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.