தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே ராஷ்டிரபதி நிலையத்தில் வருகிற டிச., 29ஆம் தேதி மலர் மற்றும் தோட்டக்கலை திருவிழா நடைபெறவுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், மலர்கள், செடிகள் கண்காட்சி இடம்பெறும். இதில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'உத்யன் உத்சவ்' என்ற பெயரில் இந்த மலர் திருவிழாவை மத்திய வேளாண்மை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை இணைந்து நடத்துகிறது.