கேரளா: திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் உள்ள மகளிர் விடுதி முன் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக நடமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வினோத் (35) என்ற வாலிபர் மதுபோதையில் விடுதி முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாசமாக நடமாடிவிட்டு தப்பியோடினார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் வினோத் பிடிபட்டார். இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.