தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தில் லோன் ஆப் மூலம் கடன் வாங்கிய இளைஞர், கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். சந்தீப் என்ற இளைஞர், லோன் ஆப் மூலம் கடன் வாங்கிய நிலையில் அதை அவர் திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், லோன் ஆப் முகவர்கள், அவரது வீட்டிற்குச் சென்று அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சந்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து முடிந்தது.