அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (டிச.26) காலை இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மௌசுமி கோகோய் என்ற இளம்பெண்ணை, பூபேன் தாஸ் என்பவர் காதல் என்ற பெயரில் துன்புறுத்தி வந்துள்ளார். தனது காதலை ஏற்காத கோபத்தில் பட்டப்பகலில், கண்மூடித்தனமாக இளம்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். கழுத்து, கை, வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தியதில் அப்பெண் உயிரிழந்தார். பின்னர், பூபேன் தாஸ் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.