அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர். சமூக வலைதளங்களில் வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ‘#ShameOnYouStalin’ என்ற வாசகம் பொருந்திய பேப்பரை காட்டியபடி, புகைப்படத்தை தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை. சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் ஸ்டாலின் அவர்களே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.