சாட்டையால் அடித்துக் கொள்ள போகிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது, நாளை முதல் வேறு மாதிரியாக தான் டீல் செய்வோம். நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று எனக்கு நானே 6 சாட்டையடி கொடுக்கப் போகிறேன். அண்ணாமலை வீதிக்கு இறங்கினால் தாங்காது” என்று பேட்டியளித்துள்ளார்.