இந்தியா கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை நீக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. பொதுமக்களிடம் தவறான தகவல்களைக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் திசைதிருப்புவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, "பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்துகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்ய அக்கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. ஆகவே, காங்கிரஸை இந்தியா கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும்" என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.