தமிழிசையை கைது செய்த போலீஸ்.. எல்.முருகன் கண்டனம்

83பார்த்தது
தமிழிசையை கைது செய்த போலீஸ்.. எல்.முருகன் கண்டனம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியலுக்கு உள்ளானதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “போராட்டம் நடத்தச் சென்ற, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இது கடுமையான கண்டனத்துக்குரியது. பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி