ஹரியானா: பரீதாபாத் நகரில் 11-ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்ஷுல் அப்பகுதியில் போதைப்பொருள் விற்கும் கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக, அக்கும்பல் அன்ஷுலை 14 முறை கத்தியால் குத்தியுள்ளது. இதையடுத்து, அவருடைய சகோதரி அஞ்சலி மற்றும் உடனிருந்தவர்கள் உடனடியாக அன்ஷுலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.