கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்திற்கு முன்பாக, விமானத்திற்குள் எடுக்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அவ்வீடியோவில், பயணிகள் அனைவரும் ஆக்சிஜன் குழாய்களின் உதவியுடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்துள்ளனர். மேலும், விமானத்தின் பழுதான பாகமும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் சிகிச்சையில் உள்ளனர்.