தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் குறைந்த வயதுடைய வேட்பாளர்கள் பலர் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். பிரபலமான வேட்பாளர்களில் அருண் நேரு (40), சிங்கை ராமச்சந்திரன் (36), விஜய பிரபாகரன் (33), நாம் தமிழர் கட்சியின் அபிநயா (28), அண்ணாமலை (39) வினோஜ் பி செல்வம் (37) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 50 வயதுக்குட்பட்ட வேட்பாளர்களை அதிகம் நிறுத்திய கட்சிகள் பட்டியலில் நாம் தமிழர் (29) முதலிடத்தில் உள்ளது.