சிறுமியை தடுத்து நிறுத்தி கையைப் பிடித்து 'ஐ லவ் யூ' என்று சொன்ன இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மும்பையில் 2019ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. தானும் சிறுமியும் காதலிப்பதாக இளைஞன் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறுமியின் கையைப் பிடித்ததன் மூலம் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பின்னர் 24 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.