சாதம் வேக வைத்து வடித்த தண்ணீர் மற்றும் அரிசி ஊறவைத்த தண்ணீரை இனி தூக்கி எறியாதீர்கள். இது இரண்டையும் சேர்த்து முடியின் அளவிற்கு ஏற்ப நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். உச்சந்தலை முடியின் வேர்கால்கள் வரை நன்றாக தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து பின்னர் கழுவினால் போதும். அரிசி ஊற வைத்த தண்ணீர் முடியை வலுவாக வளர உதவி செய்கிறது. சாதம் வடித்த தண்ணீர் முடியை மென்மையாகவும், பளபளப்பாக்கவும் உதவுகிறது.