அரிசி கழுவிய தண்ணீரில் நம்மால் கிளென்சர், ஃபேஸ் மாஸ்க், டோனர் போன்றவற்றை உருவாக்க முடியும். அரிசியை சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த நீரை வடிகட்டி ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்தால் கிளென்சர் தயாராகிவிடும். இதை காட்டன் கொண்டு நனைத்து முகத்தில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி விடலாம். பால் சேர்க்காத நீரை ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்து தேவைப்படும் நேரத்தில் முகத்தில் ஸ்பிரே செய்தால் சூப்பரான டோனர் ரெடி.