சிக்னல்களில் மாநகர பஸ்கள் அதிக நேரம் விற்பதை தவிர்க்கும் வகையில், மாநகர பேருந்துகள் சிக்னலில் நிற்கும் பொழுது பச்சை நிற விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். பஸ்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை குறையும். எரிபொருள் செலவும் குறையும். இந்த திட்டத்திற்காக ஜிஎஸ்டி சாலையில், ஆலந்தூர் முதல் சென்னை வரையிலான வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.