பார்சலில் வந்த ஆண் சடலம்.. பரபரப்பு தகவல்

52பார்த்தது
பார்சலில் வந்த ஆண் சடலம்.. பரபரப்பு தகவல்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. புதிதாக வீடு கட்டிவரும் இவருக்கு கடந்த 19ஆம் தேதி பெரிய மரப்பெட்டி ஒன்று பார்சல் சர்வீஸில் வந்தது. அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அதன் உள்ளே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் விசாரித்து வந்த போலீசார், சொத்து பிரச்சனையில் துளசியை மிரட்டுவதற்காக அவரது சகோதரி சுஷ்மா, அவரது கணவர் ஸ்ரீதர் ஆகியோர் இதனை செய்ததும், போதையில் கிடந்த கூலி தொழிலாளியை கொன்று அவரது உடலை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி