முன்னாள் வன அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “மலை பாம்பு ஒன்று பயங்கரமாக சுமார் 7 அடி மேலெழும்புகிறது. அது எதையோ இரையாக உட்கொண்டுள்ளது. இந்த நிலையில் அந்தப் பாம்பு நகர முடியாமல் தவிக்கிறது. இதற்கிடையில், கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி நகர்கிறது. இதை பார்க்க பயங்கரமாக உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.