முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக்கூடாது. அதனால் தான் பிற மாநிலங்களை ஒருங்கிணைக்க, அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டில் நாளை (மார்ச் 22) நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நம் முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.