வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ரலீஸையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரசன்னா, என் ஆதர்ச நடிகருடன் திரையில் இடம் பெறுவதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த உன்னதமான மனிதருடன் செலவழித்த ஒவ்வொரு தருணத்தையும் போற்றுவேன். உங்களை நேசிக்கிறேன் அஜித்குமார் சார். இதற்கு நன்றி என கூறியுள்ளார்.